
குருநானக் பிறந்த நாளையொட்டிக் குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் சீக்கியர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விடுத்துள்ள செய்தியில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும், குறிப்பாக சீக்கிய சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், குருநானக்கின் வாழ்வும் போதனையும் காலத்தால் அழியாத ஞானத்துடன் மனிதருக்கு வழிகாட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அன்பு, சமத்துவம், தொண்டு ஆகியவற்றை அவருடைய போதனைகள் வழியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.


