வந்தே மாதரத்தை அவமதித்தால் 3 ஆண்டு சிறை – மசோதா நிறைவேற்றம்!

‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான “தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026” மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, இனி அப்பாடல் இசைக்கப்படும் போது வேண்டுமென்றே தடையை ஏற்படுத்துவதோ, இடையூறு விளைவிப்பதோ அல்லது அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.

இந்த மசோதா மக்களவையிலும் நிறைவேறி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றால், தேசிய கீதம், தேசியக் கொடி மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு இணையாக ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் அதிகாரப்பூர்வமான அதே உயரிய அந்தஸ்து கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *