ஹாக்கி உலகக் கோப்பை – காவி நிற ஜெர்சியுடன் களமிறங்குகிறது இந்திய அணி!

2026 ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பாரம்பரிய நீல நிற ஜெர்சிக்குப் பதிலாக புதிய காவி நிற ஜெர்சியை அணியவுள்ளது. நீல நிற ஆடுகளத்தில் வீரர்களை எளிதில் அடையாளம் காணவும், தேசியக் கொடியில் உள்ள காவி நிறத்தை போற்றும் வகையிலும் இந்த முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஹாக்கியின் நீண்டகால அடையாளமான நீல நிறமே தொடர வேண்டும் என ஒரு தரப்பினர் வாதிட்டாலும், இந்த புதிய நிற மாற்றத்திற்கு பொதுமக்களிடையே கலவையான வரவேற்பு கிடைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *