
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு மொத்தம் 4 டிஎம்சி தண்ணீர் கிடைக்கவுள்ளது. முன்னதாக, நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு குறைவாக உள்ளதாகவும், காவிரிப் படுகையில் போதிய மழை பெய்யாததால் தற்போது தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடகா தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
எனினும், அந்த வாதங்களை நிராகரித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.


