போயிங் விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடிப்பு.!

நடுவானில் பறந்து கொண்டிருந்த போயிங் விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்ததால் இதில் அதிர்ஷடவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

கிரீஸில் இருந்து ஜெர்மனிக்கு நடுவானில் பறந்து கொண்டிருந்த போயிங் 757 ரக விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதில், 273 பயணிகளுடன் எட்டு ஊழியர்கள் பயணம் செய்துள்ளனர்.

மேலும், விமானிகள் விமானத்தை அவசரமாக தரையிறங்கி பயணிகளின் உயிரை காப்பாற்றியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்ட பின்னர் தங்கும் விடுதி கிடைக்காததால் விமான நிலையத்திலையே தங்கவைக்கப்பட்டனர்.

மறுநாள் அவர்கள் டஸ்ஸல்டார்ஃப் நகருக்கு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். இதனிடையே, நடுவானில் விமானத்தின் தீப்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *