
அரியானா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் எட்டில் ஒரு பங்கு அதாவது 25 இலட்சம் வாக்குகள் போலியானவை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தில்லியில் அரியானா மாநிலத்தில் தேர்தல் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி ராகுல்காந்தி பேசினார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் காங்கிரஸ் வெற்றிபெறும் எனக் கூறிய நிலையில், அவை எல்லாம் தலைகீழாக மாறிவிட்டதாகக் கட்சியினர் பலர் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.
அரியானாவில் பதிவான வாக்குகளில் எட்டில் ஒருபங்கு போலி வாக்காளருடையது என்று ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் கட்சி 22 ஆயிரம் வாக்குகளில் தோல்வியடைந்ததாகத் தெரிவித்தார்.
அதே நேரத்தில் பிரேசிலில் இருந்து வந்த ஒரு பெண் பத்து வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் மொத்தம் 22 முறை வாக்களித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
அரியானாவில் பதிவான வாக்குகளில் எட்டில் ஒரு பங்கு அதாவது 25 இலட்சம் வாக்குகள் போலியானவை என ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார். போலி வாக்காளர்கள் 25 இலட்சம் பேரில் அந்த பிரேசில் பெண்மணியும் ஒருவர் எனக் கூறினார்.


