நயினாருக்கு அண்ணாமலை ஆப்பு : மகிழ்ச்சியில் ஓபிஎஸ்

திருநெல்வேலியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்று முதல் முன்னாள் தலைவரான அண்ணாமலை அவரது முதுகில் குத்த தொடங்கி விட்டார் . தமிழகம் முழுவதும் முக்கிய நிர்வாகிகளை நியமிப்பதில் நைனார் நாகேந்திரன் ஒரு பட்டியலை டெல்லிக்கு அனுப்பிய சமயத்தில் அண்ணாமலையும் ஒரு பட்டியலை டெல்லிக்கு அனுப்பினார்
ஆனால் நைனார் நாகேந்திரன் அனுப்பிய பட்டியலின்படி தான் டெல்லி மேலிடம் நடவடிக்கை எடுத்தது . இதற்கிடையே ஆட்சியில் பங்கு போட நாங்கள் என்னை ஏமாளிகளா என எடப்பாடியார் கேட்ட விவகாரத்தில் நைனார் நாகேந்திரனுக்கும் அண்ணாமலைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது . இதற்கிடையே தமிழகத்தில் பலமான கூட்டணியை அமைக்க வேண்டும் அப்படி கூட்டணி அமைத்தால் தான் திமுகவை முறியடிக்க முடியும் என்பதில் டெல்லி பாஜகாமேலிடம் மிகத் தெளிவாக இருக்கிறது
தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் இடம் மட்டுமல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடமும் இது குறித்து டெல்லி பாஜக மேலிடம் வலியுறுத்தி வருகிறது . இந்த நிலையில் முந்தைய கூட்டணியில் இருந்த ஓ பன்னீர்செல்வத்தின் அணியினர் தற்பொழுது பாஜகவில் இருந்து விலகி விட்டனர் . மாறாக மு க ஸ்டாலினை சந்தித்து என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை
இந்த நிகழ்வுகள் டெல்லி மேல் இடத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது அவர்கள் நைனார் நாகேந்திரனை அழைத்து எப்படியாவது ஓ பன்னீர்செல்வத்தை பாஜக கூட்டணியில் சேருங்கள் என உத்தரவிட்டனர் . இதனை ஒட்டிதான் ஓ பன்னீர்செல்வத்தை பிரதமருடன் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று நைனார் நாகேந்திரன் சொன்னார்
ஆனால் நான் உங்களை ஆறு முறை தொடர்பு கொண்டேன் நீங்கள் போனை எடுக்கவே இல்லை என ஓ பன்னீர்செல்வம் விளக்கம் தெரிவித்தார் . ஓ பன்னீர்செல்வத்தை பொருத்தவரையில் திமுகவில் சேர்வதாகவோ அல்லது தமிழக வெற்றிக்கழகத்தில் சேர்வதாகவோ முடிவுகள் எதுவும் எடுக்கவில்லை
அவரைப் பொறுத்த வரையில் பாஜக கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதுதான் விருப்பம் ஆனால் அது நிறைவேறவில்லை என்பது அவருடைய தனிப்பட்ட போராட்டக் களமாக இருக்கிறது
இந்த நிலையில் அண்ணாமலையும் ஓ பன்னீர்செல்வமும் தொலைபேசியில் பேசி உள்ளனர் அப்பொழுது இந்த ஆகஸ்ட் மாதம் இறுதியிலேயே உங்களுக்கு பிரதமர் மோடியின் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தருகிறேன் நீங்கள் பேசுங்கள் என அண்ணாமலை சொல்லி இருக்கிறார் பதிலுக்கு ஓ பன்னீர்செல்வம் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார் . இதன் மூலம் ஓ பன்னீர்செல்வத்தை பாஜகவில் சேர்க்க முடியாத நைனார் நாகேந்திரனுக்கு தற்பொழுது அண்ணா மலை ஆப்புகு வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *