200 க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்..!

Advertisements

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள  பல்வேறு கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அதிமுகவை சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் புரட்சித்தலைவி ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளருமான பன்னீர்செல்வம் தலைமையில் மாற்று கட்சியினர் ஆணைவாடி கரையம்பாடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டோர் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

கட்சியில் இணைய வந்த புதிய உறுப்பினர்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்பு அளித்தார்.இந்நிகழ்வின் போது உடன் மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பொய்யாமொழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *