சிக்கன் ஆம்லேட் செஞ்சு பாருங்க… அசத்தலா இருக்கும்…!

Advertisements

பெரும்பாலான மக்களுக்கு அசைவம் என்றால் முதலில் நினைவிற்கு வருவது முட்டைதான். முட்டை ஒரு சுவையான பொருள் என்பதையும் தாண்டி ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது.

மேலும் முட்டையை எண்ணற்ற வழிகளில் சமைக்கலாம். குறிப்பாக முட்டை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது ஆம்லேட்தான்.

முட்டை ஆம்லேட் செய்வது என்பது மிகவும் எளிதான வேலைதான், ஆனால் எவ்வளவு நாள்தான் ஒரே மாதிரியான ஆம்லேட் சாப்பிடுவது. புதுப்புது ஆம்லேட் தயாரிப்பது என்பதும் அவ்வளவு கடினமானது அல்ல.

உதாரணமாகச் சிக்கன் ஆம்லேட் செய்வது என்பது மிகவும் எளிதானது அதேபோலச் சாதாரண ஆம்லேட்டை விட அதிக சுவையானது. இந்தப் பதிவில் சிக்கன் ஆம்லேட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:

  • முட்டை – 4
  • சமைத்த சிக்கன் – கால் கப்(சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்)
  • நறுக்கிய வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • சாம்பார் தூள் – 1 ஸ்பூன்
  • மிளகுத்தூள் – 2 ஸ்பூன்
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
  • உப்பு – தேவைக்கேற்ப
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அதேபோலச் சமைத்த சிக்கனையும் பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  • பின்னர் நறுக்கி வைத்த சிக்கனை அதில் போடவும்.
  • பின்னர் முட்டைகளை உடைத்து இந்தக் கலவையில் ஊற்றவும்.
  • பின்னர் இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பின்னர் மிளகுத்தூள் மற்றும் சாம்பார் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலவையை நன்கு கலக்கவும்.
  • தோசைக்கல்லை சூடாக்கி அதில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றிக் காயவிடவும்.
  • தோசைக்கல் காய்ந்ததும் இந்தக் கலவையை ஊற்றி நன்கு வேகும்வரை காத்திருந்து பின்னர் திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவைத்து தட்டிற்கு மாற்றவும்.
  • சூடான, சூப்பரான சிக்கன் ஆம்லேட் ரெடி. இதைச் சைடிஷாகவும் சாப்பிடலாம் அல்லது காலை உணவாகவும் சாப்பிடலாம்.
  • உங்களுக்குக் கூடுதல் சுவை தேவைப்பட்டால் இதில் ஒரு ஸ்பூன் சீஸ் சேர்த்து ஆம்லேட் செய்யலாம்.
  • இது ஆம்லேட் க்கு ஆடம்பரமான சுவையைக் கொடுக்கும்.

சாதாரண எண்ணெய்க்குப் பதில் ஆலிவ் எண்ணெயில் ஆம்லேட் செய்வது சுவையையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *