மருத்துவர் கலீலூர் ரஹ்மான் மறைவு – முதல்வர் விஜய் இரங்கல்!

Advertisements

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனின் மூத்த மகனும், மருத்துவருமான கே.எம்.கே.கலீலூர் ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரமும் மன வேதனையும் அடைந்ததாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், தனது ஆழ்ந்த இரங்கலைப் பதிவிட்டுள்ளார்.

தனது அன்பு மகனை இழந்து வாடும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் தோழர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *