விசாரணையை நிறுத்தாவிட்டால் வரி விதிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை..!

பிரேசில் நாட்டின் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனரோவுக்கு எதிரான விசாரணையை நிறுத்தாவிட்டால் அந்நாட்டு ஏற்றுமதிப்பொருட்களுக்கு ஐம்பது விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக இரண்டாம் முறையாக டிரம்ப் பதவியேற்ற பின் சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கான வரியைக் கடுமையாக உயர்த்தியுள்ளார்.

இந்நிலையில் பிரேசிலில் அவருக்கு ஆதரவாக முன்பிருந்த அதிபர் ஜெயிர் போல்சனரோ மீது அந்நாட்டில் ஊழல் விழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையை நிறுத்தாவிட்டால் பிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 விழுக்காடு சுங்க வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *