பேட்டரி காரில் சென்று அதிரடி ஆய்வு..!

விருதுநகரில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் மாநாடு மேடை, பார்வையாளர் அரங்கு உள்ளிட்ட பகுதிகளை பேட்டரி கார் மூலம் துணை முதலமைச்சர் உதயநிதி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் திமுக இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள் ராமச்சந்திரன்,தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வில், விழா மேடை, பார்வையாளர் அரங்கு உள்ளிட்ட பகுதிகளை பேட்டரி கார் மூலம் துணை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து, அனைத்து நிர்வாகிகளுக்கும் பிஸ்கட், தண்ணீர், குளிர்பானம், உள்ளிட்ட தொகுப்புகள் தயார் செய்யும் பணிகளையும் ஆலோசனைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *