Flying fish: பறக்கும் மீன்கள்…

தண்ணீரில் வாழ வைத்தான்…
விண்ணில் பறக்க வைத்தான்…

பறக்கும் மீன்கள்…நீரிலும் வானிலும் மாறி மாறி வாழக்கூடியவை… உலகம் முழுவதும் காணப்படுகிறது.

இவை அட்லாண்டிக், பசிஃபிக், இந்தியப் பெருங்கடல்களின் சூடான வெப்ப மண்டல மற்றும் கடல் பகுதிகளில் வசிக்கின்றன.இவை பார்ப்பதற்கு நீர் மூழ்கிக் கப்பல் போன்று தோற்றமளிக்கும்.

பெரிய இறக்கை போன்ற இடுப்புத் துடுப்புகள் இவை பறப்பதற்கு உதவுகின்றன. இவை கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு 35 மைல்கள் அதாவது 56 கிலொமீட்டர் வரை பறக்கக் கூடியது.

அதே போல 650 அடி உயரம் பறக்கும் தன்மையது. அதே சமயம் இவற்றின் இறகுகள் துடுப்பு போல் செயல்பட்டு நீரில் நீந்தவும் உதவுகிறது.இவற்றின் வியக்கத் தக்க உடல் அமைப்பு என்னவெனில், இதன் வால் தான்.

வாலின் மேற் பரப்பில் பற்கள் நீண்டும், அடிப்பகுதியில் சிறிது குட்டையாகவும் இருக்கும். வால் 17-லிருந்து 32 சென்டிமீட்டர் வரை இருக்கும்.40 வகையான பறக்கும் மீன்கள் உள்ளன.

இவைகள் தங்களை இரையாக்கிக் கொள்ள வரும் மீன்களிடமிருந்து தப்பிக்க பறந்து சென்று விடும். அதே சமயம் இவை தப்பித்து வானில் பறக்கும்போது, அங்கும் அவற்றிற்கு ஆபத்து காத்திருக்கிறது. விண்ணில் வட்டமிடும் பருந்து, கழுகு ராஜாளி போன்ற பறவைகள் அப்ப்டியே வந்து கொத்தி வாயில் லபக் என்று விழுங்கி விடும்.

இது தான் இவற்றின் வாழ்க்கைப் பயணம். ஆபத்து எங்கும் உள்ளது எனத் தெரிந்தாலும் மன வலிமையுடன் இதுவும் கடந்து போகும், எதையும் தாங்கும் இதயம் மட்டுமல்லாது ஆபத்தைப் போராடி ஏதிர்கொள்வோம் என்பதையே நமக்கு உணர்த்துகின்றன… அவைகள் நமக்குப் பாடம் கற்பிக்கிறது.

துணிந்து நில்… போராடு… வெற்றி காண்… மீண்டால் வாழ்க்கை… மாண்டால் விடு… இது தான் வாழ்க்கை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *