
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் மக்களவையில் புதன்கிழமை நடைபெறவுள்ளது. மக்களவை காலை 11 மணிக்குத் தொடங்குகிறது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேசுவார். எதிர்க்கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இதன் மூலம் மக்களவையில் மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு, மாநிலங்களையிலும் நிறைவேற்றப்படும். நாரி சக்தி வந்தானெனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதா அமலுக்கு வந்தால், நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.


