ஈரான் தற்போது ரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
டெல் அவிவ் நகரில் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஈரான் தற்போது ரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார்.
இதனைப் பயன்படுத்த இஸ்ரேல் ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறினார். ஈரான் தங்களை எதிர்கொள்வதற்காக மாற்று ஆயுதங்களைத் தேடி வருவதாகத் தெரிவித்தார்.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால், ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.
இதற்கிடையே, இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. இதுபோன்ற பொய்யான தகவல்களை அமெரிக்கா பரப்பி வருவதாக ஈரான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதனால், இரு நாடுகளுக்கிடையே மீண்டும் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.


