உக்ரைனில் இரயில்கள் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்..!

Advertisements

உக்ரைனில் இரயில்கள் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல் நடத்தியதில் 30 பேர் படுகாயமடைந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரஷ்யா எல்லையில் உள்ள தலைநகர் கீவ்வின் வடமேற்கு பகுதியான ஸோஸ்ட்காவில் இருந்து உக்ரைனில் உள்ள 2 பயணிகள் இரயில்களை குறிவைத்து இரஷ்ய டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.

இதில். குழந்தைகள் உட்பட 30 பேர் படுகாயமடைந்த நிலையில், அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

தொடர்ந்து, செர்னிவ் நகரில் உள்ள மின் உற்பத்தி மையத்தில் இரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 50 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கி உள்ளன.

இது ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, இரஷ்யா, பயணிகள் இரயில்கள் மீது தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *