ஓமியோபதி மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்த குடியரசுத் தலைவர் வலியுறுத்தல்.!

தேசிய அறிவியல் மாநாட்டில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஓமியோபதி மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் ஓமியோபதி மருத்துவம் பற்றிய தேசிய அறிவியல் மாநாட்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தார். ஓமியோபதி மாநாட்டில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ஓமியோபதியின் எதிர்கால நம்பகத்தன்மையும் கல்விசார் தகுதியும், அதன் ஆராய்ச்சியின் அறிவியல் நேர்மை மற்றும் அது உருவாக்கும் மருத்துவ ஆதாரங்களின் தரம் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும் எனத் தெரிவித்தார்.

ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்முறை அமைப்புகள் ஒன்றிணைந்து, வலுவான ஆராய்ச்சிக் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.ஒவ்வொரு மருத்துவ முடிவும் நோயாளியின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் நலனை உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சுகாதாரப் பராமரிப்பின் மிக முக்கியமான நோக்கம், துன்பத்தைப் போக்குவதும் மனித வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும் ஆகும் எனக் குறிப்பிட்டார்.

நமது நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் அனைவரும், அனைவருக்கும் கிடைக்கக்கூடிய, சமத்துவமான, அறிவியல் ரீதியாகப் பொறுப்பான மற்றும் தேவைக்கேற்பச் செயல்படக்கூடிய ஒரு சுகாதார அமைப்பை உருவாக்குவதற்குப் பங்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *