
இந்திய கலாச்சாரம் என்பது பண்டிகைகள் நிறைந்த கலாச்சாரம் ஆகும்.ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு கதை உண்டு அதேபோல் தான் தீபாவளி பண்டிகைக்கும் அழகான ஒரு கதை இருக்கிறது.
தீபாவளி பண்டிகையை நாம் முன்னோர்கள் காலத்திலிருந்து கொண்டாப்பட்டு வருகின்றோம்.தீபாவளி என்ற சொல்லுக்குத்” தீப ஒளி “என அர்த்தம் உண்டு. இந்தியா முழுவதும் உள்ள தமிழர்கள் அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் நாள். தீபாவளி என்பது ஐப்பசி தமிழ் மாதத்தில் கொண்டாடுகிறோம், ஏன்னென்றால் நரகாசுரன் என்ற “அசுரனை” கொடுமைகளும், இம்சைகளும் தாங்காமல் கிருஷ்ணர் கொடூரமாகக் நரகாசருணை கொள்கின்றான், அப்போது, கொடுமைகளை அறிந்த நரகாசுரன் ஒரு வரம் கேட்கிறான், நான் சாகும் நாள்ளான இன்று மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்று “வரம்” கேட்டான். அன்று, மக்கள் கொண்டாடதொடங்கிய நாள் தான் இந்தத் தீபாவளி பண்டிகை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை இந்நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.
தீபாவளியின் சிறப்பு :
தீபாவளி அன்று மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் குடும்பத்துடன் அதிகாலையிலேயே எழுந்து தலைக்கு எண்ணெய் வைத்துக் குளித்து, புதிய ஆடைகளை அணிந்து அந்நாளை இனிமையாக்குவார்கள்.அந்நாளில் அனைவரும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளுடன், சைவம், அசைவம் எனக் குடும்பங்களுடன் சேர்ந்து சமைத்து ஒன்றாக இணைந்து கொண்டாடுவது தான் தீபாவளியின் பெருமை.
தீபாவளியை முன்னிட்டு மக்கள் கொண்டாட்டம்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அணைத்து ஜவுளி கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். ஒருபக்கம் இளைஞர்கள் பட்டாசு வாங்குவதற்கும், அதனை வெடிப்பதற்குமே சிலர் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவார்கள். இன்னொரு பக்கம் தீபாவளி அன்றும் வேலைகளுக்குச் செல்ல வேண்டிய வருத்தத்திலும் தனது குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாட முடியாது என்ற ஏக்கத்தில் இருப்பார்கள். தன் குடும்பங்களைப் பிரிந்து வெளிநாடுகளில் வேலை பார்க்கும் தமிழர்களும் மனம் வருந்தி, அங்கு இருக்கும் தமிழர்களுடன் ஒன்று இணைந்து தன் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடுவது போல் நினைத்துக்கொண்டு தீபாவளியை மகிச்சியுடன் கொண்டாடுவார்கள்.
மக்களின் உள்ளங்களிலும், அவர்களின் இல்லங்களிலும் மகிழ்ச்சியை வழங்கும் தீபாவளி திருநாள், உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் மட்டுமல்லாமல் சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்களாலும், வெவ்வேறு காரணங்களைக் கூறி தீபாவளி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி திருநாள் நாளை மறுதினம் (31-10-2024) கொண்டாடப்படுகிறது.

