Nellai : அதிகாலை முதல் தொடரும் கனமழை.!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, இராதாபுரம், திசையன்விளை வட்டங்களில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி, இராதாபுரம் திசையன்விளை வட்டங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

திசையன்விளையில் பெய்து வரும் கனமழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் செல்வதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். கடந்த ஒரு மாதமாக மழை பொய்த்துப் போன நிலையில் இன்று மழை பெய்துள்ளதால் பொதுமக்களும் உழவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *