இளைய புரட்சித் தலைவி த்ரிஷா பேரவை தொடங்கப்பட்ட அதிர்ச்சியில் இருந்து இந்த தமிழ்கூறும் நல்லுலகம் மீளும் முன்பே அடுத்த பேரதிர்ச்சியை இறக்கி இருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். பெரிய ஐயாவுக்கு என்னதான் ஆச்சி… வாங்க செய்தித் தொகுப்புல பார்ப்போம்…
தமிழகத்தில் சமூக மற்றும் கல்வி ரீதியாகப் பின்தங்கியிருந்த வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், இட ஒதுக்கீடு உரிமைகளைப் பெறுவதற்காகவும் 1980-ஆம் ஆண்டு ‘வன்னியர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கியவர்தான் மருத்துவர் ராமதாஸ்.
தன்னுடைய விடா முயற்சியாலும் தளராத உழைப்பாலும் வன்னியர்களை ஒருங்கிணைத்தவர் அந்த வாக்கு வங்கியைக் கொண்டு1989ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கி, தமிழக அரசியல் களத்தில் தனக்கென தனி முத்திரயைப் பதித்தார்.
கருணாநிதி, ஜெயலலிதா என அரசியல் ஆளுமைகளோடு மாறி மாறி கூட்டணி போட்டு, கட்சியையும் தன்னையும் வளப்படுத்திக் கொண்டவர், வன்னிய மக்களுக்கான இடஒதுக்கிட்டைப் பெற்றுத் தந்ததிலும் முனைப்புடன் செயல்பட்டார்…தானோ, தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ பாமகவின் பொறுப்புகளுக்கு வரமாட்டோம் என கட்சி தொடங்கியபோது கொடுத்த உறுதிமொழியை காற்றில் கரைந்து போகச் செய்தவர், மகன் அன்புமணியை பாமகவுக்குள் கொண்டு வந்து மத்திய அமைச்சராகி அழகுபார்த்தார்.
வளர்த்தகிடா மார்பில் பாயும் என்னும் பழமொழிக்கேற்ப, ஒரு கட்டத்தில் பாமக தலைவர் யார் என்பதில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே முட்டல் மோதல்கள் ஏற்பட்டு பாட்டாளி மக்கள் கட்சியே கலகலத்துப் போய்விட்டது. அன்புமணி, தாந்தான் பாமக என செயல்பட்ட நிலையில், மூத்தமகள் ஸ்ரீகாந்தியை கட்சிக்குள் நிர்வாகியாக்கி அழகுப்பார்த்தார் மருத்துவர் ராமதாஸ்.
ஆனால் எல்லாமே காற்றூப்போன பலூனாகிப் போனது 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர்.
பாஜக அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அன்புமணி தலைமையிலான பாமக 4 தொகுதிகளைக் கைப்பற்றி சட்டமன்றத்துக்குள் என்ட்ரியாகிவிட, புரட்சித்தாய் சசிகலாவுடன் கூட்டணி போட்ட பெரிய ஐயா மருத்துவர் ராமதாஸ் இருக்கும் இடம் தெரியாமல் போனார்.இந்தச் சூழலில்தான், கடந்த ஜூலை 25ஆம் தேதி டாக்டர் ராமதாசின் 88வது பிறந்தநாளையொட்டி திண்டிவனம் அருகே கோனேரிக்குப்பத்தில் நடைபெற்ற கல்லூரி விழாவில்,தனது வயது மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்து அரசியல் துறவறம் மேற்கொள்வதாக ராமதாஸ் அறிவித்தார்.
இனிமேல் அரசியல் பேசவோ, அரசியலில் தலையிடவோ மாட்டேன் என்றும், பா.ம.க. மற்றும் அரசியல் பொறுப்புகளை மகன் அன்புமணியும், மருமகள் சவுமியாவும் கவனித்துக் கொள்வார்கள் என்று தெரிவித்தார்.இதனால் அப்பாவை நம்பி பாமகவுக்குள் எண்ட்ரியான ஸ்ரீகாந்திக்கு, தம்பி அன்புமணி கையில் பாமக சென்று அரசியல் சூழல் மாறியதால் அமைதியாக இருந்தவர், திடீரென வரும் டிசம்பர் 6-ஆம் தேதி, தான் புதிய அரசியல் பயணம் தொடங்குவதாக அறிவித்து விட்டார்.
சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மக்கள் நலன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியல் பயணம் தொடங்க உள்ளதாகவும், டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் ஆதரவாளர்கள் ஒன்றுகூடுமாறு அழைப்பும் விடுத்துள்ளார். புதிய இயக்கத்தைத் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, ராமதாஸின் ஆதரவாளர்கள் மற்றும் பா.ம.க.வில் இருந்து நீண்டகாலமாக ஒதுங்கியுள்ள முக்கிய நிர்வாகிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஸ்ரீகாந்திமதி ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் டிசம்பர் 6ஆம் தேதி, ஸ்ரீகாந்தி என்ன செய்யப் போகிறார் என பாமக வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எழுந்திருக்க, யாருமே எதிர்பாராமல், மருத்துவர் ராமதாஸ் தடாலடியாக தமிழ் மீட்பு இயக்கம் என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்.
தாய்த்தமிழ் மொழியை மீட்டெடுத்து, தமிழர்களின் அன்றாட வாழ்வில் பயன்பாட்டு மொழியாக மாற்றுவதே தமிழ் மீட்பு இயக்கத்தின் முக்கிய நோக்கம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.”தமிழ்நாட்டில் ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற முழக்கம் இன்றளவும் நடைமுறைக்கு வரவில்லை.
தமிழில் உரையாடும்போதுகூட ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளின் கலப்பு அதிகரித்துள்ளது.சிற்றூர்கள்வரை இந்தப் போக்கு பரவியுள்ளது. கல்வி, இறை வழிபாடு, பண்பாட்டு நிகழ்வுகள், நீதிமன்ற நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழுக்கு உரிய இடம் கிடைக்கவில்லை. தாய்த்தமிழ் மொழியை மீட்டெடுத்து, தமிழர்களின் அன்றாட வாழ்வில் பயன்பாட்டு மொழியாக மாற்றுவதே புதிய இயக்கத்தின் முக்கிய நோக்கம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழர்களிடையே நிலவும் அனைத்து வகையான வேறுபாடுகளையும் கடந்து, தாய்மொழியின் உரிமைகளை மட்டுமே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.அரசியல் துறவறம் செல்வதாகக்கூறிச் சென்ற மருத்துவர் ராமதாஸ் தொடங்கியுள்ள தமிழ் மீட்பு இயக்கம், இளைய புரட்சித்தலைவி த்ரிஷா பேரவைக்கும், டிசம்பர் 6-ல் ஸ்ரீகாந்தி தொடங்கும் இயக்கத்துக்கும் போட்டியாக வருமா நெட்டிட்சன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மகன்கிட்ட இருந்து கட்சிய மீட்க முடியல… இதுல இது வேறயா …
திரிஷாவுக்கு போட்டியாக புதிய இயக்கம் தொடங்கி இருக்கிறாறோ ராம்தாஸ்…காலம் முடியும் வரை எப்படியாவது கல்லா கட்ட வேண்டும் என்பதே லட்சியம் போல எனவும் நக்கலடித்துவரும் இணையவாசிகள்,இப்படித்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா, மக்கள் மேடை – மக்கள் இயக்கம்னு தொடங்குனாங்க… அது என்னாச்சுன்னே தெரியலையேன்னு சிண்டு முடிச்சும் விட்டுருக்காங்க…
கடந்த ஜூன் மாசம், லதா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ பதிவுல ள வீடியோ பதிவில், ‘மக்கள் மேடை என்ற மக்கள் இயக்கத்தை தொடங்குகிறோம்.
இந்த மாநிலத்துக்காக வேலை செய்ய நினைக்கும் அத்தனை பேரும் ஒன்றாக சேரலாம். ஒன்றாக சேர்ந்து, எங்களை தொடர்பு கொண்டு, ஒரு பெரும் மக்கள் சேவையாக, மக்கள் சக்தியாக உருவாகி இந்த மாநிலத்துக்கு பல நன்மைகளை செய்ய முன்வாருங்கள்.
ஒன்றாக சேருவோம், ஆக்கபூர்வமான காரியங்களை செய்வோம். மக்கள் மேடை இயக்கத்தில் சாமானிய மக்கள் அனைவரும் இணையலாம். நல்ல சிந்தனையும், நாட்டுக்கு வேலை செய்யும் மனமும் உள்ள அனைவரும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
மூத்த குடிமக்கள், குடிமைப்பணி அதிகாரிகள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள், ராணுவத்தினர் என அனைவரும் தங்களின் அனுபவங்களை எங்களுக்கு கொடுக்கலாம்.எங்களுடன் தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டுக்காகவும், அந்தந்த தொகுதிக்காகவும் நீங்கள் வேலை செய்யலாம். மாநிலத்துக்காக வேலை செய்யும் உள்ளூர் தலைவர்களை உருவாக்கலாம். எனவே அனைவரும் இந்த இயக்கத்தில் இணைய வேண்டும்” என அழைப்பு விடுத்தார்…
ஆமா மக்கள் மேடை — மேடையில இருக்கா அல்லது மேடைக்கு கீழ போயிடுச்சா?


