முதல்வர் விஜய் முன்னிலையில் 75 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்..!

சென்னை அருகே கோவளத்தில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் 75 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

சென்னை கோவளத்தில் தொழில்முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வில், முதலமைச்சர் விஜய், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சுமார் 58 ஆயிரத்து 214 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, மொத்தம் 75 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவித்தார். ஒரு நாளைக்கு ஆயிரம் வேலைவாய்ப்புகள் என்ற இலக்குடன், 200 நாட்களில் 2 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.

இதில், 15 ஆயிரத்து 250 கோடி ரூபாய் முதலீட்டில் 12 பல்முனைச் சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்கள் அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *