iPhone 16:சீனாவின் சகவாசம் போதும், இந்தியாவில் உற்பத்தியைத் துவக்க ஆப்பிள் முடிவு!

Advertisements

பீஜிங்: ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் 16 மாடல் உற்பத்தியை இந்தியாவில் துவக்க முடிவு செய்துள்ளது.

உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள், தனது ஸ்மார்ட் போன் சீரிஸ் 16 , கம்ப்யூட்டர், ஐபோன்கள், ஸ்மார்ட் வாட்சுகள் ஆகியவற்றை ஆண்டுதோறும் செப்டம்பரில் அறிமுகம் செய்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு, ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ஐபோன் 16 மாடல்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 10 மாடல்களில் ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகப்படுத்தியது.

இத்தனை ஆண்டுகளாக, ஆப்பிள் நிறுவனம், சீனாவில் தன் போன் உற்பத்தியை மேற்கொண்டு வந்தது. சில ஆண்டுக்கு முன் இந்தியாவிலும் உற்பத்தியைத் தொடங்கியது. இந்தியாவில் போன் உற்பத்தி செய்வது, ஆப்பிள் நிறுவனத்துக்கு விற்பனை உள்ளிட்ட பல வகையிலும் வசதியாக உள்ளது. இதனால் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஐபோன் 16 மாடல் உற்பத்தியை இந்தியாவிலேயே மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார சிக்கல்
@ஐபோன் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு சில ஆண்டுகளாகக் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதற்கு, சீனாவில் உற்பத்தியைக் குறைக்கும் ஆப்பிளின் புதிய திட்டம் தான் காரணம். அமெரிக்கா, சீனா இடையிலான அரசியல் உறவுகள் மோசமாக இருப்பதால் தான் இத்தகைய நிலை சீனாவுக்கு ஏற்பட்டுள்ளதாகத் தொழில் துறையினர் கருதுகின்றனர்.

சீனாவில் சரிவு
சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Canalys தரவுப்படி, ஆப்பிள் இந்தியாவில் 2022ல் 1.5 கோடி ஐபோன்களை உற்பத்தி செய்தது. இது, கடந்த ஆண்டு 2.5 கோடியாக உயர்ந்துள்ளது தெரியவந்தது. 2024ம் ஆண்டின் முதல் ஆறு வாரங்களில் சீனாவில் ஐபோன் விற்பனை 24 சதவீதம் குறைந்துள்ளது என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஐபோன் 17 மாடல் பிரத்யேக உற்பத்திக்கான சாத்தியம் அதிகமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *