ஐஐடி வளாகத்தை அனைவரும் பார்வையிடலாம்!

Advertisements

சென்னை:

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையங்களையும் ஆய்வகங்களையும் பார்வையிடலாமெனப் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

”அனைவருக்கும் சென்னை ஐஐடி” என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஐஐடி வளாகத்தைப் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப் படுகின்றனர்.

அந்த வகையில் 2025ம் ஆண்டு ஜனவரி 3 மற்றும் 4ம் தேதி ஐஐடி வளாகத்தைப் பொதுமக்கள் பார்வையிடலாமென ஐஐடி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஐஐடியில் இயங்கி வரும் 4 தேசிய ஆராய்ச்சி மையங்கள், 11 ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றோடு ஆராய்ச்சி திட்டப் பணிகளை எடுத்துரைக்கும் 60-க்கும் மேற்பட்ட தொழி்ல்நுட்ப அரங்குகளையும் பொதுமக்கள் பார்க்கலாம்.

இந்தச் சிறப்பு திட்டத்தின் கீழ் ஐஐடியை பார்வையிட விரும்பும் பொதுமக்கள் டிசம்பர் 25ம் தேதிக்குள் shaastra.org/open-house. என்ற இணையதள இணைப்பில் தங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *