மாணவர் தனுஷ் கொலை – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்!

தவெக அரசு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்குத் தமிழ்நாட்டில் தொடரும் கொலைகளே சாட்சி என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் தவெக அரசு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்குத் தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி என்று குறிப்பிட்டுள்ளார். மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *