எடப்பாடி – ஜெயக்குமார் திடீர் மோதல் : அதிமுகவில் கடும் பதற்றம்.! 

Advertisements
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பர் ஒன் வலதுகரமாக திகழ்பவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இன்றைய சூழ்நிலையில் அதிமுக தரப்பில் மிகப்பெரிய பிரச்சார பீரங்கியாகவும் இருப்பவர் இந்த ஜெயக்குமார்.  எடப்பாடி பழனிச்சாமி எப்படிப்பட்ட முடிவுகள் எடுப்பதாக இருந்தாலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் தனிப்பட்ட ஆலோசனை நடத்தி அதன் பிறகு தான் முடிவு எடுப்பார் என்பது அதிமுக வட்டாரத்தில் எல்லோரும் நன்கு அறிந்த தகவலாகும்
பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் கூட எடப்பாடி பழனிச்சாமியுடன் கைகோர்த்து அவருக்கு பக்கபலமாக இருப்பவர் ஜெயக்குமார். தற்பொழுது எடப்பாடி,  பழனிச்சாமிக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே திரை மறைவில் மோதல் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது இதனால் ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களும் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள் .
தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சியாக திகழும் அதிமுகவுக்கு பக்க பலமாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். சென்னை ராயபுரத்தில் பிறந்து வளர்ந்த இவர் பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டம் படித்து சென்னை சட்டக் கல்லூரியில் வழக்கறிஞருக்கு படித்தவர் .
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவின் தீவிர தொண்டராக செயல்பட்டு வரும் ஜெயக்குமார் முதன்முதலாக 1991 ஆம் ஆண்டு ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் . இதனை தொடர்ந்து,  அதே தொகுதியில் 2001 ஆம் ஆண்டு 2006 ஆம் ஆண்டு 2011 ஆம் ஆண்டு 2016 ஆம் ஆண்டு 2021 ஆம் ஆண்டு என வரிசையாக ஏழு முறை அதே தொகுதியில் போட்டியிட்டார் .
இதில் 1996 ஆம் ஆண்டு தேர்தலிலும் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலிலும் இதே தொகுதியில் ஜெயக்குமார் தோல்வியை சந்தித்தார் .மொத்தமாக ஏழு முறை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயக்குமார் ஐந்து முறை வெற்றியை சந்தித்திருக்கிறார் . தமிழ்நாடு அமைச்சரவையில் சட்டம் தகவல் தொழில்நுட்பம் மின்சாரம் ஆகிய துறைகளில் அமைச்சராக இருந்திருக்கிறார்.
2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தலைவராகவும் பணியாற்றினார். இது மட்டுமல்லாமல் ஜெயலலிதா அமைச்சரவையில் கால்நடை பராமரிப்பு மீன்வளம் பால்வளம் பிற்படுத்தப்பட்டோர் நலம்  ஆகிய துறைகளிலும் அமைச்சராக இருந்திருக்கிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக மாறினார் .
இவரது குரல் அதிமுகவை பொருத்தவரையில் எடப்பாடி பழனிச்சாமியின் குரலாகவே எதிரொலித்தது . எடப்பாடி பழனிச்சாமியும் அரசியல் தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஜெயக்குமார் இடம் ஆலோசனை செய்த பிறகு தான் தனது முடிவுகளை அறிவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது .
இது மட்டுமல்லாமல், பத்திரிக்கையாளர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஜெயக்குமார். பத்திரிக்கையாளர்களிடம் கோபம் கொள்ளாமல் சிரித்தபடியே தனது கருத்துக்களை வெளியிடுவதில் திறமை மிக்கவர். தமிழ்நாடு அரசியல் சூழ்நிலைகள் குறித்து உடனுக்குடன் தனது கருத்துக்களை பகிரங்கமாகவும் சில சமயங்களில் நகைச்சுவையாகவும் தெரிவிப்பார் .
இது மட்டுமல்லாமல் அதிமுகவில் சிறந்த பேச்சாளராகவும் பலம் வருபவர் ஜெயக்குமார் . இப்படிப்பட்ட ஜெயக்குமார் இடைப்பட்ட காலத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தமிழக வெற்றி கழகத்தில் இணைய போவதாக பேசப்பட்டது . ஏற்கனவே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த நிலையில் ஜெயக்குமாரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருக்கிறார் என்ற தகவல் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால் ஜெயக்குமார் இதனை முழுவதுமாக மறுத்தார் என் உயிர் உள்ளவரை அதிமுகவில் தான் இருப்பேன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைவேன் என்பது  கற்பனையான செய்தியாகும் என தெரிவித்தார் . இந்த நிலையில் , வருகிற சட்டமன்றத் தேர்தலில் ஜெயக்குமாருக்கு மயிலாப்பூர் தொகுதியை ஒதுக்கி தர எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது .
இது தொடர்பாக , அமைச்சர் ஜெயக்குமார் எடப்பாடி பழனிச்சாமி இடம் கருத்து தெரிவிக்கும் பொழுது நான் ராயபுரம் தொகுதியில் தான் போட்டியிடுவேன்.  அதுதான் நான் பிறந்து வளர்ந்த ஊர் எனவே ராயபுரம் தொகுதி இல்லாமல் மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிட விரும்பவில்லை என பேசி இருக்கிறார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருக்கின்றன .
இந்த நிலையில்,  எடப்பாடி பழனிச்சாமிக்கு தனது கருத்தை உறுதியாக தெரிவிக்கும் வகையில் ராயபுரத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காரசாரமாக பேசியிருக்கிறார்.  ராயபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது கடந்த 2001 ஆம் ஆண்டு தேர்தலில் என்னை ஜெயிக்க வைத்தீர்கள் . அதன் பிறகு 2006 2011 தேர்தலிலும் ஜெயிக்க வைத்தீர்கள்.
ஆனால் 2021 தேர்தலில் என்னை கைவிட்டு விட்டீர்கள் நான் என்ன தப்பு செய்தேன். சொல்லுங்கள் ஊரை அடித்து உலையில் போட்டேனா? கட்டப்பஞ்சாயத்து செய்தேனா ? இல்லையென்றால் கள்ளச்சாராயம் காய்ச்சினேனா ? ரவுடித்தனம் செய்தேனா?  மாமூல் கேட்டேனா?  இல்லை அடாவடித்தனம் செய்து பொறுக்கித்தனம் செய்தேனா? சொல்லுங்கள் பார்க்கலாம் .
யாராவது , அப்படி நான்  செய்திருந்ததாக சொன்னால் பார்க்கலாம் அரசியலில் விட்டே நான் போய் விடுகிறேன் அப்படி எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிடையாது.  உங்களை சுற்றி சுற்றித்தான் நான் வருகிறேன் இன்னும் பத்து தேர்தல் அல்ல 11 தேர்தல்களில் நான் நிற்பேன்.  அதுவும்  ராயபுரத்தில் தான் நிற்பேன் நான் போய் பொதுச்செயலாளரிடம் கேட்டேன் அவர் கும்மிடிப்பூண்டியில் நிற்கலாம் அல்லது மயிலாப்பூரில் நிற்க்கலாம் அல்லது சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் நிற்கலாம் என்று சொல்கிறார்.
நான் எதற்காக அங்கெல்லாம் போய் நிற்க வேண்டும் எனக்கு ஒரே ஒரு சொந்த ஊர் இருக்கிறது . அது ராயபுரம் தான் அங்கு தான் நான் நிற்பேன். எனக் காரசாரமாக பேசினார். அவர் பேசும் பொழுது நான் ஏதாவது தவறு செய்ததாக இருந்தால் சொல்லுங்கள் அதிமுகவை விட்டு விலகுகிறேன் என்று பேசியதும் பரபரப்பு தகவலாக பார்க்கப்படுகிறது..
இதற்கிடையே திரை மறைவில் தனக்கு ராயபுரம் தொகுதியை ஒதுக்கி தராவிட்டால் அவர் அதிமுகவை விட்டு ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது . இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி இடம் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன . கடந்த தேர்தலில் ஜெயக்குமார் இந்த தொகுதியில் தோல்வி அடைந்ததால் எடப்பாடி பழனிச்சாமி தற்போது அவருக்கு வேறு தகுதியை ஒதுக்கி தர திட்டமிட்டு இருக்கிறார்.
ஆனால் ராயபுரம் தொகுதியில் நான் எப்படியும் வெற்றி பெறுவேன் என்பதில் ஜெயக்குமார் உறுதியாக இருக்கிறார். இதனிடையை  ராயபுரத்தில் ஜெயக்குமார் பேசிய பேச்சு தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஒரு தகவலை சொல்லி இருக்கிறார். அவர் பேசும் போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சில் இப்பொழுது வித்தியாசம் தெரிகிறது . அவர் வேறு விதமாக பேசுகிறார் அவரது பேச்சை பார்த்தால் கட்சிக்கு எதிராக தோன்றுகிறது . கடந்த தேர்தலில் திமுகவுக்கு சவால் விட்ட அவர் தற்பொழுது அடக்கி பேசுகிறார் என தெரிவித்திருக்கிறார் .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *