அமைச்சர்கள் யாரும் தவறு செய்யக் கூடாது – முதல்வர் ஜோசப் விஜய் எச்சரிக்கை!

அமைச்சர்கள் யாரும் தவறு செய்யக் கூடாது என முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதிதாக அமைந்திருக்கும் த.வெ.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் வெற்றித் தமிழகம் என்ற பெயரில் தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் பேசிய போது, தூய்மையான அரசாக பணியாற்றுவதே நம்முடைய இலக்கு என்று தெரிவித்தார். அமைச்சர்கள் யாரும் தவறு செய்யக் கூடாது.
அப்படி, தவறு செய்பவர்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வில், அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *