
புதிய அரசியல், புதிய பாதை, புதிய இயக்கம் இன்று முதல் தொடங்குகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்க உள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதிய அரசியல், புதிய பாதை, புதிய இயக்கம் இன்று முதல் தொடங்குகிறது என்று தெரிவித்தார்.
தன்னுடைய கருத்துக்கு பாஜக தலைமை செவிசாய்க்கவில்லை என்று குற்றம் சாட்டினார். எதிர்காலத்தை நோக்கி பயணப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் தன்னை அழைத்துச் செல்லும் பாதையில் பயணிக்க வேண்டிய நேரம் இது என்றும் கூறினார். ஒரு புதிய அரசியலை, அடிப்படை கட்டமைப்பை மாற்றக் கூடிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பாஜகவில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவித்தார்.
அரசியலில் புதிய பாதையை உருவாக்க 17 ஆண்டுகளாக போராடிவருவதாகக் கூறினார். அடுத்த பொதுத் தேர்வில் போட்டியிட போவதாகத் தெரிவித்தார். இந்நிலையில், அண்ணாமலை இயக்கத்தில் இதுவரை 1 லட்சம் பேர் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.



