
தமிழகத்தில் திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகப் பணியாற்றிய கே.என்.நேரு மீது, லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. டெண்டர் முறைகேடுகள் மற்றும் பணி நியமனத்தில் லஞ்சம் என சுமார் ரூ. 1,020 கோடி வரை ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை ஆதாரங்களைச் சேகரித்தது. இதில், நகராட்சி நிர்வாகத் துறையில் மட்டும் சுமார் ரூ. 634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த ஊழல் தொடர்பாகப் பதிவு செய்யுமாறு கடந்த ஆட்சியில் தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது தவெக ஆட்சி அமைந்த நிலையில், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் அவர்களின் உத்தரவின் பேரில், அமலாக்கத்துறை வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் கே.என்.நேரு மீது அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.



