காயிதே மில்லத்தின் 131-ஆவது பிறந்தநாள் – முதலமைச்சர் விஜய் மரியாதை!

Advertisements

காயிதே மில்லத்தின் எளிமையான வாழ்க்கை முறையால் மக்கள் அவரை கண்ணியமிக்க காயிதே மில்லத் என அழைத்தனர் என்று முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

காயிதே மில்லத்தின் 131-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள வாலாஜா பள்ளி வாசலில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் விஜய் மலர்ப்போர்வை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், காயிதே மில்லத்தின் எளிமையான வாழ்க்கைமுறை, நேர்மை மற்றும் சிறந்த குணத்திற்காக மக்கள் அவரை கண்ணியமிக்க காயிதே மில்லத் என அழைத்தனர் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில்,  தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத்தின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்” என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர் என்றும் புகழாரம் சூட்டினார். பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *