Advertisements

இந்தியா , அமெரிக்கா இடையே விரைவில் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பேசிய அதிபர் டிரம்ப், கடந்த காலங்களில் இந்தியா, அமெரிக்கக் கொள்கைகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அமெரிக்க நிறுவனங்கள் மீது 200 சதவீதம் வரை அதிக சுங்க வரிகளை விதித்ததாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, கடந்த ஆட்சியில் விதிக்கப்பட்ட 200 சதவீத வரியால் ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் இந்தியாவிலேயே ஆலை அமைக்கும் நிலை ஏற்பட்டது என்று டிரம்ப் சுட்டிக்காட்டினார். ஆனால் அது தான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நடந்தது என்றும், தற்போது நிலைமை தலைகீழாக மாறி அமெரிக்கா இந்தியா மூலம் நல்ல லாபம் ஈட்டி வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடி தனது மிகச்சிறந்த நண்பர் என்றும், அவருடனான சுமுக உறவின் மூலம் இரு நாடுகளும் விரைவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் என்றும் அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Advertisements



