ஐஸ்கிரீம் அதிகம் சாப்பிடா உயிருக்கே ஆபத்து!

Advertisements

ஐஸ்கிரீம் சத்தான உணவு இல்லை என்பதையும் மறுக்க முடியாது. இதனால், ஆரோக்கியத்திற்கு பாதிப்பு நிச்சயம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் மிகவும் விரும்பிச் சாப்பிடும் ஓர் உணவு என்றால் ஐஸ்கிரீம் தான். ஒரு காலத்தில் காத்திருந்து ஐஸ்கிரீம் சாப்பிட்ட காலம் போய், திரும்பிய பக்கம் எல்லாம் ஐஸ்கிரீம் கடைகளாகத் தான் தென்படுகிறது.

கடற்கரை, பூங்கா, சினிமா அரங்குகள் என எந்த இடத்திற்கு சென்றாலும் ஒரு ஐஸ்கிரீம் கடையைப் பார்க்கலாம். அதன் அருமையான சுவைமூலம் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் தன் பக்கம் இழுக்கும் ஆற்றல் கொண்டது ஐஸ்கிரீம்.

ஆனால் ஐஸ்கிரீம் சத்தான உணவு இல்லை என்பதையும் மறுக்க முடியாது. இதனால், ஆரோக்கியத்திற்கு பாதிப்பு நிச்சயம், அந்த வகையில், ஐஸ்கிரீம் அதிகம் சாப்பிடுவதால், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு பெருமளவு அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் :
ஐஸ்கிரீம் சாப்பிடுவது, கொலஸ்ட்ராலை எகிற வைத்து இதய நோய் அபாயத்தைக் கணிசமாக அதிகரிக்கிறது என்கின்றன ஆய்வுகள்.
அதுமட்டுமின்றி இதனால் சளி, இருமல் பிரச்சனையும் அதிகம் ஏற்படுகிறது. ஐஸ்கிரீமில் நிறைவற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மறுபுறம், ஐஸ்கிரீமில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக உள்ளது. இந்த இரண்டும் ஒன்று சேர்வதால் ஏற்படும் தாக்கம் அதிகம்.
இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, அதிகப்படியான ஐஸ்கிரீம் சாப்பிடுவது உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு நோய் வாய்ப்பையும் அதிகரிக்கிறது.
இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் :
ஐஸ்கிரீம் மட்டுமல்ல. ரொட்டி, பாஸ்தா, மிட்டாய்கள். கேக் போன்ற கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை உண்ணும்போது அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.
ஏனெனில் இவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிக்கச் செய்யும். சாப்பிடுபவர்களுடன் களுடபாதாவது ஒப்பிடும்ம்பி. தினமும் சாப்பிடுபவர்களுக்கு ஐஸ்கிரீம் தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
இதய நோய் அல்லது மாரடைப்பு அபாயத்தை நீக்க, பொரித்த உணவுப் பொருட்கள், குறிப்பாகச் சிப்ஸ், எண்ணெயில் பொரித்த சிற்றுண்டிகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றையும் மிகக் குறைந்த அளவில் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *