அண்ணாமலையின் அதிரடி அறிவிப்புக்குக் காத்திருக்கும் அரசியல் களம்!

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி, புதியக் கட்சி அல்லது புதிய அரசியல் அமைப்பை தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக, அவர் டெல்லிக்குச் சென்று பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபின் உள்பட பல்வேறு முக்கிய தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.

மேலும், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்த அறிவிப்பை நாளை மறுநாள் அவர் வெளியிடுவார் என அரசியல் வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *