
தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வு, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையக் குளறுபடிகளால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது திமுக ஆட்சியில் “நிர்வாகம்” எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்பதைக் காட்டியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், TNPSC Group 2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“Technical Fault” என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற திமுக ஆட்சியாளர்கள், அந்த Fault- ற்குப் பின்னால் இளைஞர்களின் பல ஆண்டுக்கால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது என்பதை உணர வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசு தான் திமுக அரசு என்றும் விமர்சித்துள்ளார்.


