மின்கசிவால் விபத்து – குஜராத் அணி வீரர்கள் பேருந்தில் தீ!

ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்குப் பின் குஜராத் டைடன்ஸ் அணி பயணித்த பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது.
வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு 20 கோடியும், இரண்டாம் இடம் பிடித்த குஜராத் அணிக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
இந்நிலையில் போட்டிக்குப் பிறகு, குஜராத் அணி வீரர்கள் மைதானத்திலிருந்து தங்கும் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த பேருந்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஊழியர்கள் உடனடியாக அனைத்து வீரர்களையும் பாதுகாப்பாகக் கீழே இறங்கச் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும், வீரர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சாலையில் நின்றுகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *