Advertisements

பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தற்போது பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருப்பதாக சொல்வது விவசாய மக்களுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகம் என முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பயிர் கடன் தள்ளுபடி குறித்து பதிவிட்டுள்ளார். அதில், இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின்படி தான் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு நிதியமைச்சர் அண்மையில் விளக்கம் சொல்லியிருப்பதாகத் தெரிவித்தார்.
வாக்குறுதி அளித்து விட்டு தற்போது ரிசர்வ் வங்கியைக் காரணம் காட்டி மறுப்பது விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றும் செயல் என்று கூறினார். தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிப்படி, விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பொய்யான வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு வழங்கி அவர்களுக்கு நம்பிக்கையூட்டிவிட்டு, தற்போது பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருப்பதாக சொல்வது விவசாய மக்களுக்கு இழைக்கப்படும் பச்சைத் துரோகம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisements



