சகோதரத்துவமும் மகிழ்ச்சியும் பெருகட்டும் என பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில், பக்ரீத் பண்டிகை திருநாளையொட்டி, நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்த நன்னாள் நம் சமூகத்தில் சகோதரத்துவத்தையும் மகிழ்ச்சியையும் மேலும் வலுப்படுத்தட்டும் என்றும், அனைவரின் வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் தான் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *