Advertisements

தவெகவுக்கு யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நீதித்துறையில் அரசு வழக்கறிஞர்கள் நேர்மையாகவும் நியாயமாகவும், தகுதி அடிப்படையிலும் மட்டுமே நியமிக்கப்படுவர் என்று தெரிவித்தார். தவெக ஆட்சியில் அரசுப் பணி நியமனங்களுக்கு ஒருபோதும் லஞ்சம் பெறப்படாது என்று உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றதாலேயே அதிமுகவில் பிளவு ஏற்பட்டதாகவும், எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்ததால் தான் தவெகவில் இணைந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தவெகவுக்கு யாரிடமும் பேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார்.
மேகதாது விவகாரத்தில் அணை கட்டுவதைச் சட்டப்பூர்வமாகத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என்று தெரிவித்தார்.
Advertisements



