
ஏமன் நாட்டில் 150 அகதிகளுடன் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 68 பேர் உயிரிழந்தனர். 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
எத்தியோப்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அகதிகளை ஏற்றி ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக ஒரு படகு ஏமன் வளைகுடா வளியாகச் சென்றது.
அபியான் மாகாணம் அருகே ஆபத்தான நீரோட்டம் உள்ள பகுதியில் படகு சென்றபோது நீரின் வேகத்தாலும் உயர்ந்த அலைகளாலும் அலைக்கழிக்கப்பட்டுக் கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் கடலில் மூழ்கி இறந்த 68 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

