குஜராத்தின் பவநகரில் சரக்குப் பெட்டக ஆலையைப் பார்வயிட்டார் அஸ்வினி வைஷ்ணவ்!

Advertisements

உலகத் தரத்திலான வசதிகளுடன் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரயில் வந்தே பாரத் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் பவநகரில் வளர்ச்சியடைந்த பாரதம் என்னும் இலக்கை எட்டுவதற்காக வணிகர்கள், தொழிலதிபர்களுடன் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துரையாடலை நடத்தினார். இதில் மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, நிமுபென் பம்பானியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா 331 இலட்சம் கோடிப் பொருளாதார மதிப்புடன் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.

உலகத் தரத்திலான வசதிகளுடன் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது வந்தே பாரத் ரயில் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாகக் கன்டெய்னர் கார்ப்பரேசனின் சரக்குப் பெட்டகத் தயாரிப்பு ஆலையை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *