மேளதாளம் முழங்க நடந்த மகா கும்பாபிஷேகம்..!

பணகுடி இராமலிங்க சுவாமி உடனுறை சிவகாமி அம்பாள் மற்றும் நம்பிசிங்கபெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா 17 ஆண்டுகளுக்கு பின் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் பணகுடியில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோயிலில் கடந்த 2009ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் அடிப்படையில் புனரமைப்பு பணிகள், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் முடிந்த நிலையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த நாள் குறிக்கப்பட்டு இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 20ம்தேதி தொடங்கி நடந்து வந்தது.

விழாவின் சிகர நாளான இன்று யாகசாலையில் இருந்து புனித நீர் கைலாய வாத்திய மேளதாளம் முழங்க கோவிலைச் சுற்றி எடுத்து வரப்பட்டது . மேலும் , இவ்விழாவை சபாநாயகர் அப்பாவு, ஆட்சியர் சுகுமார், நெல்லை  திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் பணகுடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *