லியூலியாங் நகரில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க கம்பெனி அலுவலகத்தில்தீவிபத்து ஏற்பட்டது.
இதில் 19 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீஜிங்: சீனாவின் ஷான்ஜி மாகாணம், லியூலியாங் நகரில் தனியாருக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க கம்பெனி அலுவலகம் உள்ளது. 5 தளங்கள் கொண்ட இந்த அலுவலகத்தில் இன்று அதிகாலையில் வழக்கம்போல் பணியாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென 2வது தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவெனப் பரவியதால் பணியாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். சிலர் தீப்பற்றிய பகுதியில் சிக்கிக்கொண்டனர்.
இதுபற்றித் தீயணைப்பு துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.