
பிக் பாஸில் உள்ளது போல நடந்து கொள்வதாக திமுகவினரை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணி வலுபெற வேண்டும் என்றும் தற்போது அது நடந்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் திமுக-வினர் பிக் பாஸில் உள்ளது போல நடந்து கொள்கிறார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கூறியதை குறிப்பிட்டு நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், அரசியலில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை எல்லாம் திரும்ப பெற்று கூட்டணிக்கு வருவது எதார்த்தம் என்று கூறினார். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் அண்ணாமலையின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்தது என்று பாராட்டியுள்ளார்.
