இந்தியாவிலேயே அதிகமுறை தடை செய்யப்பட்ட மதத் தீவிரவாத இயக்கம் ஒன்றின் விளம்பரங்களுக்காக, ஒன்றிய பாஜக அரசு 76 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
இந்துத்துவா சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு கட்டியமைக்கப்பட்டதுதான் ராஸ்ட்ரீய சேவா சங்கம் என்கிற RSS அமைப்பு ஹெட்கேவர் என்பவரால் 1925ஆம் ஆண்டு விஜயதசமி நாளில் தொடங்கப்பட்டது.மஹாராஷ்ட்ர மாநிலம் நாக்பூரை தலைமை இடமாகக் கொண்டு இன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தால் நாடு சந்தித்த சோதனைகள் ஏராளம்.
குறிப்பாக, இந்தி பேசும் வடமாநிலங்களில் தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் அமைப்பினரால் ஏற்படுத்தப்பட்ட வன்முறைகள் ஏராளம். இதன் காரணமாகவே இந்தியாவில் 3 முறை இந்த இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவராவார்.
நக்சல்பாரிகளை இடதுசாரி பயங்கரவாதிகள் என்பது போல் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் வலதுசாரி இந்துத்துவ மத அடிப்படை வாதிகள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவுதான் பாஜக. இந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களில் ஊறி வளர்ந்தவர்கள்…
இடம் மாறினாலும் சித்தாந்தத்தில் உறுதியுடன் இருந்து இந்துத்துவா கொள்கையை சிந்தாமல் சிதறாமல் கொண்டு செல்ல பல ஆயிரம் ஆர்எஸ்எஸ் ஊழியர்கள் இரவு பகலாய் 24×7 என்ற அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டப்பட்ட 2025ம் ஆண்டில் அந்த அமைப்பின் முக்கிய நோக்கங்களை நிறைவேற்ற அதன் தலைவர்கள் திட்டமிட்டு செயல்பட்டனர்.
இதன் ஒரு பகுதியாக RSS நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஊடக விளம்பரங்களுக்காக, ஒன்றிய பாஜக அரசு 76 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலவிட்டுள்ள செய்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் உறுதியாகி உள்ளது. ஒன்றிய அரசின் கலாசார அமைச்சகம் இதற்கான செலவுகளை மேற்கொண்டுள்ளது.
இந்தத் தகவல் கூட ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை அல்ல. சமூக ஆர்வலர் அஜய் வாசுதேவ் போஸ் என்பவர், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவின் விளம்பரத்துக்காக ஒன்றிய அரசு எவ்வளவு செலவிட்டது என்ற கேள்வியை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்டுள்ளார்.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த ஒன்றிய அரசு, ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கலாச்சார அமைச்சகத்தால் பல்வேறு அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட மொத்த தொகை 76 லட்சத்து 13 ஆயிரத்து 129 ரூபாய் எனத் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் இந்தப் பதிலின் நகல் கடிதம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியா, மதச் சார்பற்ற இந்தியா, மதத் தீவிரவாதிகளுக்கு இடம் தராத இந்தியா என்று உலக நாடுகள் மத்தியில் புகழ் பெற்ற இந்தியாவில் தடை செய்யப்பட்ட மத தீவிரவாத இயக்கத்தின் நூற்றாண்டு விழா விளம்பரம் ஒன்றிய அரசின் பணத்தில் செலவிடப்பட்டிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



