
பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘ராக்கா’ திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது..
பிரபல இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ‘ராக்கா’ என்ற படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் சுமார் 800 கோடி ரூபாய்க்கு அதிகமான பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இதில், தீபிகா படுகோன் கதாநாயகியாக நடிக்கிறார்.
தொடர்ந்து, அனுஷ்கா ஷர்மா, மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் ஆகியோர் நடிக்க உள்ளதாகத் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ‘ராக்கா’ படத்தில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘ராக்கா’ படத்தில் அல்லு அர்ஜுனுடன் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இணைய உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அவர்களது ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


