MURDER: காதலனுடன் ஓடத் திட்டமிட் மனைவியைத் தீத்துக்கட்டிய சம்பவம்!

Advertisements

காதலனுடன் ஓடிபோக திட்டமிட்டார். இதனால் அவரைக் கொலை செய்தேன் என மனைவியைக் கொலை செய்த தொழில் அதிபர்வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்தார்.

ராஜ்கோட்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் குருபா ஜிரோலி. தொழில் அதிபர். இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு 17 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர்.

இவர்கள் அம்பிகா டவுன்ஷிப் பகுதியில் உள்ள சாந்திலன் நிவாஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் அம்பிகாவுக்கு தனது கணவரின் நண்பருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதையறிந்த குருபா ஜிரோலி, மனைவியைக் கண்டித்தார். கள்ளக்காதலை கைவிடும்படி கூறினார். ஆனால் அம்பிகா, கள்ளக்காதலனுடன் செல்லத் திட்டமிட்டார்.

இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த குருபா ஜிரோலி, இரும்பு பொருளால் மனைவியின் தலையில் சரமாரியாகத் தாக்கிக் கொலை செய்தார்.

பின்னர் மனைவி உடலை வீடியோ எடுத்து அதைக் குடியிருப்பில் வசிப்பவர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் பகிர்ந்தார். அந்த வீடியோவில் குருபா ஜிரோலி கூறும்போது, மனைவியிடம் கள்ளக்காதலை கைவிட வலியுறுத்தினேன். மகள் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதி முடிந்தவுடன் பிரிந்து விடலாம் என்று கூறினேன்.

ஆனால் அதற்கு அவர் மறுத்து, காதலனுடன் ஓடிபோக திட்டமிட்டார். இதனால் அவரைக் கொலை செய்தேன். அவரைக் கொன்றதற்காக நான் வருத்தப்படவில்லை. அவரால் நான் கொடுமைகளை அனுபவித்தேன் என்று கூறினார். இதைப் பார்த்த குடியிருப்பு வாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குருபா ஜிரோலி போலீசில் சரண் அடைந்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *