Advertisements
தமிழக அரசு வரும் 18ம் தேதியன்று சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நவம்பர் 18ம் தேதி, அதாவது வரும் சனிக்கிழமை கூட உள்ளது.
ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 10 மசோதாக்கள் மீது விளக்கம் கேட்டு ஆளுநர் அவற்றைத் திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் வரும் சனிக்கிழமை சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்தி, ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது.