இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்!

Advertisements

அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க டாலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளை மீண்டும் எச்சரித்துள்ளார்.

இதற்கு மாறாகச் செயல்படும் நாடுகள்மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. மேலும், ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்தக் கூடாது. சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இதை மாற்ற நினைக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும்.

அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அடங்கும். இந்நாடுகளுக்கு பொதுவான நாணயம் இல்லை.

இதற்கிடையே உக்ரைனில் நடந்துவரும் போரின் காரணமாக ரஷியா பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டது. இதனைத்தொடர்ந்து டாலரின் வல்லாதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என ரஷியா வலியறுத்தி வருகிறது.

பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்டபோது, இந்த நாடுகளுக்கெனப் பிரத்தியேக நாணயம் உருவாக்கப்படும் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டது.

அதைச் சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுதொடர்பாகத் தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டுள்ள டிரம்ப்,

பிரிக்ஸ் நாடுகள் டாலரிலிருந்து விலகிச் செல்ல முயல்கின்றன. இதை நாம் ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்த காலம் முடிந்துவிட்டது.

இந்த விரோத நாடுகளிடமிருந்து ஒரு புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ, வலிமைமிக்க அமெரிக்க டாலரை மாற்ற வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்கவோ மாட்டோம் என உத்தரவாதம் வந்தாக வேண்டும்.

இல்லையெனில் அவர்கள் 100% வரிகளை எதிர்கொள்ள நேரிடும்.மேலும் அற்புதமான அமெரிக்க பொருளாதாரத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பும் பறிபோகும். அவர்களின் உத்தரவாதத்தை நாங்கள் கோரப் போகிறோம்.

அவர்கள் மற்றொரு முட்டாள் நாட்டைக் கண்டுபிடிக்கலாம். ஆனால் சர்வதேச வர்த்தகத்திலோ அல்லது வேறு எங்கும் பிரிக்ஸ் அமெரிக்க டாலரை மாற்றும் வாய்ப்பு இல்லை.

அவ்வாறு முயற்சிக்கும் எந்த நாடும் வரிகளை எதிர்நோக்க சொல்ல வேண்டும். அமெரிக்காவின் நட்பை இழக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *