அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? பரபரப்பில் MLA -க்கள்.!

Advertisements

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தோல்வி குறித்து ஏற்பட்ட அதிருபதியால் இரு அணி​களாகப் பிரிந்து செயல்​பட்​டு வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் ஒன்​றாக இணைந்​தனர். தகுதி நீக்​கம் கோரி சபாநாயகரிடம் அளித்த கடிதங்​களைத் திரும்​பப் பெறு​வ​தாக​வும் நேற்று கடிதம் அளித்தனர். இந்த கடிதங்களை ஆய்வு செய்து இன்று முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோர் போர்க்கொடி தூக்கினர்.சட்டமன்றத்திலும் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பிலும் சிவி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 25 பேர் ஆதரவாக வாக்களித்தனர். அதிமுகவின் இரு அணிகளும் கொறடா நியமனம் செய்து தனித்தனியே கொறடா உத்தரவை பிறப்பித்தன.

எடப்பாடி பழனிசாமி தரப்பு தவெக அரசுக்கு எதிராக வாக்களித்தது எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டு இருந்தார். கொறடா உத்தரவை மீறிய எம்.எல்.ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் இரு தரப்பும் தனித்தனியாக மனு அளித்தனர்.

இதற்கிடையே SP வேலுமணி அணி மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்பட்ட சுமுக பேச்சுவார்த்தையை அடுத்து, தங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு மட்டுமே இருந்ததாகவும், பிளவு இல்லை எனவும் எஸ்பி வேலுமணி கூறினார்.இதைத்தொடர்ந்து இரு தரப்பாக சபாநாயகரிடம் அளித்த மனுக்களை நேற்று வாபஸ் பெற்றனர்.

இந்த நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் அளித்த மனுக்கள் தொடர்பாக இன்று தனது முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதாவது:- தகுதி நீக்க மனுக்களை வாபஸ் பெறுவதாக அதிமுகவின் இரு அணிகளை சேர்ந்தவர்களும் மனு அளித்து இருக்கிறார்கள். அவற்றை படித்து பார்த்து ஆய்வு செய்து வியாழக்கிழை முறையாக அறிவிப்பை வெளியிடுவேன்” என்றார்.

ஆனால் சிவி சண்முகம் மட்டும் SP . வேலுமணி மீது கோவத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் சிவி சண்முகம் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறாரா? என்ற பரபரப்பும் அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *