Nobel Prize2024:பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிப்பு!

Advertisements

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி 2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சைமன் ஜான்சன், டாரன் அசோமோக்லு, ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய மூன்று வல்லுநர்களுக்கு இந்த வருடம் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

நாடுகளின் செழுமைகளுக்கு இடையிலான வேறுபாடுகுறித்த ஆய்வுக்காக இவர்களுக்கு இந்த விருந்தானது வழங்கப்படுகிறது. ஜேம்ஸ் ராபின்சன் பிரிட்டனை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஆவார் . சைமன் ஜான்சன் பிரிட்டன்-அமெரிக்க பொருளாதார வல்லுனர். மேலும் டாரன் அசோமோக்லு துருக்கி – அமெரிக்க பொருளாதார வல்லுநர் ஆவார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *