அதிமுக எம்.எல்.ஏக்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் – தமிழிசை வலியுறுத்தல்.

மக்களின் தீர்ப்பை மதிக்காமல் ராஜினாமா செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், அருணாசலேஸ்வரர் கோவிலில் பாஜக  முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மாற்றத்தை நினைத்து வாக்களித்த வாக்காளர்கள் தற்போது ஏமாற்றத்தில் உள்ளனர் என்று தெரிவித்தார்.
மக்களின் தீர்ப்பை மதிக்காமல் ராஜினாமா செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். இதனை தவெக ஊக்குவிப்பது மிக மிக தவறு என்று தெரிவித்தார்.
கரப்பான் பூச்சி கட்சி குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், கொரோனாவை  எதிர்கொண்ட பிரதமர் கரப்பான் பூச்சியை எதிர்கொள்ள மாட்டரா என்று வினவினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *